
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால், தன் நீண்டகால நண்பரான தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து கடந்து 2020 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு காஜலுக்கு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது அவர் மீண்டுமாக படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
அதன்படி தமிழில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும், தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 108-வது படத்திலும் காஜல் நடிக்கிறார். இந்நிலையில் தன் குழந்தையுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் காஜல். இதையடுத்து அவருக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கினர். திருப்பதி கோயிலுக்கு வந்த அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Chandamama @MsKajalAggarwal ni chustunnattu anipinchindi okkasariga 😍 #KajalAggarwal pic.twitter.com/cJcOWo09Rk
— KAFAWA™🇮🇳 (@_KAFAWA_) January 30, 2023