
மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி உள்ளது. கண்டெய்னர் லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் பலியாகி உள்ளனர்.. மேலும் 28 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

பிரேக் செயலிழந்ததில் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதி இறுதியாக ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தது கண்டெய்னர் லாரி. கண்டெய்னர் லாரி மோதியதில் வாகனங்கள், சாலை, பேருந்து நிலையம், ஹோட்டலில் இருந்தவர்கள் என மொத்தம் 15 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த விபத்து தொடர்பான சிசிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.