இஸ்ரேல் நாட்டுக்குள் கடந்த 2023ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அதன் பின் அவர்கள் அங்கு கொடூர தாக்குதல் நடத்தினர். இதனால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், அதோடு 250 க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் அங்கு வாழும் மக்கள் பாதிக்கப்பட்டனர், உதவிகள் இல்லாமல் அவதிப்பட்டனர். பின்னர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இதன் காரணமாக கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆண் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி தன் பாலின ஈர்ப்பாளர்களாக இருந்த தனது சொந்த அமைப்பினரை ஹமாஸ் சித்திரவதை செய்து தூக்கிலிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.