
சமீப காலமாக மலையாள திரை உலகில் 2 ஹீரோயின்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். இவர்கள் வெற்றி பெரும் படங்களில் நடித்து அடுத்த கட்டத்திற்கும் முன்னேறி உள்ளனர். இவர்கள் யார் என்று தெரியுமா? மமீதா பைஜு மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகிய ஹீரோயின்கள் தான். அனஸ்வராவும், மமீதாவும் ‘சூப்பர் சரண்யா’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் வளர்ந்து வருவதால் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை என்ற தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அனஸ்வரா ராஜன் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது, நானும் மமீதா பைஜூவும் இதயபூர்வமான நட்புடன் இருக்கிறோம், நாங்கள் போட்டியாளர்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் குரூப்பில் இருக்கும் மேத்யூ தாமஸ், நஸ்லேன், மம்மிதா உள்ளிட்ட அனைவருமே யாரும் யாருக்கும் போட்டியாக நினைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அதில் எப்படி தன்னை சிறப்பாக காட்டிக் கொள்ள முடியும் என்று தான் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றார்.