புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமேஷ் என்பவர் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேஷ் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 5 மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்துச் சென்று அத்துமீறியதாக தெரிகிறது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் சிலர் புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ரமேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும், இதனை வெளியே கூறினால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன் என மிரட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.