
தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. மூன்று கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
தியாகி இமானுவேல் சேகரனுடைய சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. தேவேந்திர குல வேளாளர் கல்வியாளர் குழு, தேவேந்திர வேளாளர் பண்பாட்டு கழகம், இம்மானுவேல் சேகரனின் மகள்,
அன்னாரது சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தியாகி இமானுவேல் சேகரனுடைய பிறந்த நாள் அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கக்கூடிய நிலையில், அந்த பகுதி மக்களுக்கான முக்கியமான அறிவிப்பை முதலமைச்சர் வெளியீட்டு இருக்கின்றார்.
மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகனாருக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்ப்பில் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். குறிப்பாக தென்பகுதி மக்களுடைய முக்கியமான தலைவராக விளங்கியவர் இம்மானுவேல் சேகரன். முதலமைச்சர் வரக்கூடிய ஒன்பதாம் தேதி பரமக்குடி செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்க கூடிய நிலையில், முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.