
அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அருணாசலப்பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த தேனியை சேர்ந்த வீரர் ஜெயந்த் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. இறந்த வீரரின் உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு மதுரையை வந்தடைந்தது. இதையடுத்து அவரது உடல் இன்று காலை சொந்த ஊரான ஜெயமங்கலம் கொண்டுவர செல்லப்படுகிறது. அங்கு மக்கள் அஞ்சலி செலுத்திய பின் ராணுவ மரியாதை உடன் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.