முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பாங்கரின் மகனாக அறியப்பட்ட ஆர்யன் பாங்கர், தற்போது பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றுநிலை பெண்ணாக அனாயா பாங்கர் என தனது இன அடையாளத்தை சமூக வலைதளத்தில் கடந்த ஆண்டில் பகிர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணல் மூலம் மீண்டும் வெளிவந்துள்ளது. “நான் என் பாதுகாப்பை நினைத்துத்தான் சில விஷயங்களை தவிர்ந்தேன். என் மாற்றுநிலை அடையாளத்தை தெரிந்து கொண்ட பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் என்னிடம் அபாசமான புகைப்படங்களை அனுப்பியதும் உண்டு” என அனாயா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மாற்றுநிலை அடையாளம் தெரியவந்த பிறகு கிரிக்கெட் துறையிலும், சமுதாயத்திலும் பலரின் எதிர்ப்பையும், ஆதிக்கக் கருத்துக்களையும் அனாயா எதிர்கொண்டுள்ளார். “முதலில் ஆதரித்தவர்கள் பின்னர் எதிர்த்து, என்னை ஆதரிப்பது போல நடித்து பேசினர்.

2024 நவம்பர் மாதம், தனது இன அடையாள மாற்றத்தை அனாயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தபோது அது இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றது. “கிரிக்கெட் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்தது. என் தந்தையைப் போலவே நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது.

ஆனால் ஹார்மோன் மாற்று சிகிச்சையின் காரணமாக என் உடல் பலத்திலும், விளையாட்டு திறனிலும் மாற்றம் ஏற்பட்டது. எனவே என் கனவுகளை விலக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது” என அனாயா துன்பமாக கூறியுள்ளார்.