ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்,  

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சித்தலைவர் நாமம் வாழ்க மற்றும் இதய தெய்வம் புரட்சித்தலைவி நாமம் வாழ்க. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூன்று முறை முதல்வர்….  நிரந்தர ஒருங்கிணைப்பாளர்…..  எங்கள் தங்க மகன் ஓபிஎஸ் ஐயா அவர்களுக்கு  முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு பத்திரிக்கை நண்பர்கள் மிகச் சிறப்பாக எழுச்சியாக விசுவல் செய்து எங்களை நல்லப் படியாகக் கொண்டு சேர்ப்பதற்கு அவருக்கு என்னுடைய நன்றியும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். ஐயா ஒரு சின்ன பதிவோட காத்திருக்கிறோம் நாளை  நமதே ஐயா உங்களுக்கு உங்களை செதுக்க உழி  தேவையில்லை  பல விமர்சனங்களும், துரோகங்களும் மூன்று முறை முதல்வராக இருந்து மிகப்பெரிய எழுச்சி நாயகனாக இன்று நீங்கள் வீழ்த்தி இருக்கிறீர்கள்.

இந்த மேடையில் ஐயா உங்கள் பின்னால் நாங்கள் நிற்பதற்கு மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா. எடப்பாடி போன்று துரோகிகள் பணத்தை இறைத்து இன்றையத் தினம் கூட்டத்தைச் சேர்க்கிறார்கள் இன்று நீங்கள் அனைவரும் ஐயா என்ன சொல்கிறார்களோ அதாவது கழகம் கோட்பாடுகளை விட ஐயா என்ன சொன்னாலும் செய்வதற்கு தயாராக உள்ளோம் ஐயா. உங்களுடைய அன்பும், ஆசிர்வாதமும் இருந்தால் போதும் நாங்கள் எல்லாம் தூங்கவே மாட்டோம். என்று  உங்களை அசெம்பிளியில் பன்னீர்செல்வம் என்னும் நான் என்று சொல்கிறீர்களோ 2026 ஆம் ஆண்டு உங்களை முதலமைச்சராக ஆக்கிவிட்டு தான் நாங்கள் தூங்குவோம்.  ரொம்ப மகிழ்ச்சி என தெரிவித்தார்.