
60 தொகுதிகள் கொண்ட மேகலாவில் கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஐந்து முனைப்போட்டி நிலவும் மேகலாயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வந்துள்ளன.
இந்த நிலையில் பதிவாகிய வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தபோதைய நிலவரப்படி மேகாலயாவில் எந்த கட்சிக்கும் இதுவரை பெரும்பான்மை தனிப் கிடைக்கவில்லை. ஆளும் தேசிய மக்கள் கட்சி 25 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் திரிணாமுல் 9 இடங்களிலும், பிற 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பான்மை கிடைக்காவிட்டால், தேமக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.