
பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்திக், அரவிந்த்சாமி நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் ‘மெய்யழகன்’ திரைப்படம், தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இதற்கு முன்னர் அரவிந்த்சாமி மற்றும் கார்த்திக் பேசும் உரையாடல் நீண்டதாக இருக்கும். தற்போது 18 நிமிடங்கள் காட்சிகளை கட் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரசிகர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, கட் செய்யப்பட்ட காட்சிகளுடன் ‘மெய்யழகன்’ படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த செய்தி படத்தின் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி இடையே நிகழும் நீண்ட உரையாடல் காட்சிகள் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம், திரைப்படத் துறையில் ஒரு புதிய முன்னோடியாக அமைந்துள்ளது. ரசிகர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் மாற்றங்கள் செய்யப்படுவது என்பது தமிழ் சினிமாவில் இதுவரை நடந்திராத ஒரு விஷயமாகும்.