மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 16ஆம் தேதி பால்ராஜ் உயிரிழந்து விட்டதாக கப்பல் நிறுவனம் அவருடைய தந்தைக்கு தகவல் தெரிவித்தது.

அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பால்ராஜின் தந்தை உடனடியாக லண்டனுக்கு புறப்பட்டார். அங்கு சென்ற அவரிடம் கப்பல் நிறுவனம் அவரது மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். ஆனால் பால்ராஜின் தந்தைக்கு மகன் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கப்பலில் உள்ள சில அதிகாரிகள், சீஃப் ஆபிஸர், செகண்ட் ஆபிசர் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், தூங்கவிடாமல் கொடுமை படுத்துவதாகவும், அவர்கள் மீது கேப்டனிடம் புகார் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை என்றும் தனது தந்தைக்கு வீடியோக்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பில் இருந்த போதும் எந்த ஒரு மன அழுத்தத்தையும் அவர் காட்டவில்லை என்பதால் அவர் தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்று கூறி அவருடைய குடும்பத்தினர் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பால்ராஜின் பிரேத பரிசோதனை மொஹாலி சிவில் மருத்துவமனையில் நடைபெற்று வரும் நிலையில் ஆய்வின் முடிவில் தான் உண்மை வெளியாகும் என்று கூறப்படுகிறது.