இந்தியாவின் விமான போக்குவரத்து சந்தையில் 6.9% பங்குகளுடன் GO First விமான நிறுவனம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் திடீரென நாங்கள் திவால் ஆகிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் திவால் அறிவிப்பை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அறிக்கையாக வழங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் மே 5-ம் தேதி வரை கோ பர்ஸ்ட் விமான சேவைகள் நிறுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஸ்ரீ நகர் மற்றும் டெல்லியில் இருந்து மும்பை சென்ற இரண்டு கோ பர்ஸ்ட் விமானங்கள் திடீரென குஜராத்தில் உள்ள சூரத் ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கப் பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளான நிலையில் பின் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. மேலும் விமானம் எதற்காக அவசரமாக தரை இறங்கியது என்ற காரணம் சரிவர தெரியவில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.