திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வெங்காயம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கார்த்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டி கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது மினி லாரியின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மேலும் பின்பக்க டயர்கள் மினி லாரியிலிருந்து கழன்று சாலையில் ஓடியது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் கார்த்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மினி லாரிக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.