உலகில் மொத்தம் 103 வகையான காளான்கள் உள்ளன. அதில் 7 காளான்கள் இந்தியாவில் காணப்படுகின்றனர். இந்த காளான்களின் வித்துக்கள், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும், உயிரினங்களையும் கவர்வதற்காக ஒளி உமிழும் தன்மையை கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்திலுள்ள பகுதியில் அதிசய காளான்கள் முளைத்துள்ளது. அந்த காளான் 2 அடி உயரமும், 3 அடி அகலமும், 3 அடுக்குகளை கொண்டுள்ளது. இதனை அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து சென்றனர். மேலும் சில பெண்கள் அந்த காளானுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.