செய்தியாளிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,  மக்களுக்கு பயனுள்ள மசோதாக்கள். அதுல மிகச்சிறப்பு வாய்ந்தது என்னவென்றால் ? ஏற்றுமதியில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தில நம்முடைய நாடு இருந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 63 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நம்முடைய எக்ஸ்போர்ட் ஆனது நடந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு துறையில்  எந்தவித பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதற்காக உடனடியாக இதற்காக மசோதா  கொண்டு வரப்பட்டது.

இந்த  மசோதாவின் என்னுடைய முக்கிய நோக்கம் ஈசியா தொழில் செய்யணும். இதுக்கு முன்னாடி 2 ஏக்கர், 5 ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து கொண்டு இருப்பார்கள்விவசாயிகள் ஏதாவது ஒரு காரணத்தால் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணாம இருந்தா ? அவர்களுக்கு கிட்டத்தட்ட 3 ஆண்டு சிறதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் தொழில்ல கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருந்தது. அதை எல்லாம் போகணும் என சொல்லி இப்போ 3 ஆண்டு சிறை தண்டனையை எடுத்துட்டோம்.

நம்முடைய பிரதமர் மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்கள்  ஆட்சிக்கு வந்த பிறகு கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட இந்த மாதிரி தொழில்   தேவையற்ற சட்டங்கள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கிறது. அதில் மிக முக்கியமானது… ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணலேன்னா அவனுங்களுக்கு  தண்டனை என்தை நாம்  நீக்கி இருக்கின்றோம். இந்த சட்டம் தொழிலை ஈசியாக செய்வதற்கு பலனுள்ளதாக சட்டமாக  அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.