
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னையில் திராவிட முன்னேற்ற கழகம் இண்டிக் கூட்டணியில் இருக்க கூடிய தலைவர்களை அழைத்து, மகளிர் உரிமை மாநாடு நடத்திருக்காங்க. அந்த மகளிர் உரிமை மாநாட்டுல யாரெல்லாம் மேடையின் மீது அமர்ந்து இருந்தார்கள் என்று பார்த்தோம் என்றால் ?
தந்தையினுடைய பெயர், சொந்தக்காரங்க பெயர், அவங்கள வச்சி பெண்கள் அரசியலில் யாரெல்லாம் அதிகாரம் பெற்றுள்ளார்களோ அவர்களை அரசியல் மேடையில் வைத்து, நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்து இருக்க கூடிய பெண்களுக்கான 33% பாராளுமன்றம், சட்டமன்றத்துல உள் ஒதுக்கீட்டை பத்தி விமர்சனம் செஞ்சி இருந்தாங்க. குற்றம் சொல்லிருந்தாங்க.
குற்றம் சுமத்துனவங்க யாருன்னா..? சரத் பாபு அவர்களுடைய மகள், சமாஜிவாதி கட்சி அகிலேஷ் யாதவர் அவர்களுடைய மனைவி டிம்பிள் யாதவ் அவர்கள், கலைஞர் கருணாநிதி அவர்களுடைய மகள் கனிமொழி கருணாநிதி அவர்கள் எல்லாம், வேகமா பெண்கள் அரசியலுக்கு வரணும். மோடி அவர்கள் தடுத்துவிட்டார்கள் என்று குற்றம் சுமத்துனாங்க.
பாரத பிரதமர் நரேந்தி மோடி அவர்களுடைய 33% உள் ஒதுக்கீடு என்பது நாம் அனைவருக்குமே தெரியும். எந்தவித பின்னணியும் இல்லாமல்… அரசியல்ல, உண்மையாலுமே ஒரு பெண்களுக்கு கடுமையான சூழ்நிலை அரசியல்ல இருக்கு. அதையெல்லாம் உடைத்து தகர்த்து எரிந்து வரக்கூடிய ஒரு சாதாரண பெண்மணிக்காக இந்த 33% உள் ஒதுக்கீடை கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதனால் இவர்களுக்கு இதை பற்றி பேசுவதற்கு எந்த வித தகுதியும் இல்லை என்பது எங்களுடைய கருத்து. அதே நேரத்துல உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். நமக்கு தெரியும் இத்தனை காலமாக யாருமே செய்ய துணியாததை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்தது மட்டும் அல்ல, அதற்கு ஒரு வழித்தடத்தை போட்டு காமிச்சிருக்காங்க…
33% கொண்டு வறோம்னா எப்படி கொண்டு வர போறோம்? அதை தீர்மானிக்கக்கூடிய சக்தி யாருக்கு இருக்கு ? அதற்கான கமிட்டி எப்படி இருக்கும் ? சென்சஸ் எப்போ வரும் ? எல்லாத்தையும் சொல்லி, அடுத்த தேர்தலுக்கு அது நடைமுறைக்கு வரும் என்று சொல்லி முதன் முதலாக நமக்கு எப்போ நடைமுறைக்கு வரும் என்பதும் தெரியும். இவர்களை போல ராஜசபாவில் அது பாஸ் செய்யப்பட்ட பிறகு…. கிட்டத்தட்ட 4 ஆண்டு காலம் லோக்சபாவுக்கு கொண்டு வரல. கேட்டா இதே ஆர்.ஜே.டி கட்சி, இதே ஜே.யு.டி கட்சி இவர்கள் எல்லாம் எதிர்த்தார்கள் என தெரிவித்தார்.