பிரதமர் மோடி தர்மபுரியில் போட்டியிட்டால் பிரதமரை தோற்கடித்த பெருமையை திமுகவிற்கு வழங்குவோம் என கூறியுள்ள தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அண்ணாமலை போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என தெரிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அண்ணாமலை திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கடந்த நகராட்சி தேர்தலில் 14 வார்டுகளில் பாஜக போட்டுயிட்டு வெறும் 352 வாக்குகளும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 59 இடங்களில் போட்டியிட்டு வெறும் 1082 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்ததாகவும் தெரிவித்தார்.