
டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் யமுனை நதியில் ஹரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் தேர்தல் ஆணையம் அரவிந்த் அவர்களுக்கு, இத்தகைய குற்றசாட்டுகள் இரு மாநிலங்களுக்கும் இடையேயான உறவை பாதிக்க கூடும். ஆகவே புகார் கூறிய ஆதாரங்களுடன் இன்று இரவு 8 மணிக்குள் கெஜ்ரிவால் தனது பதிலை அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது அவர் பேசியதாவது பிரதமர் குடிக்கும் தண்ணீரில் அரியானா பாஜக அரசு விஷம் கலக்குமா..? கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டு அரியானாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையுமே அவமானப்படுத்தியுள்ளது இதில் தண்ணீர் கொடுப்பதற்காக நம் நாட்டு மக்கள் நல்ல காரியமாக கருதுகின்றார்கள். தோல்வி பயத்தால் அவர்கள் இப்படி உளறுகின்றனர். இவ்வாறு பேசுபவர்களுக்கு டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன் என கூறினார். அதோடு 25 ஆண்டுகளாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை பார்த்து விட்டீர்கள். இப்போது உங்களுக்காக பணியாற்ற மோடிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் உங்களை எனது குடும்பத்தைப் போல பார்த்துக் கொள்கிறேன். உங்களின் கனவு இனி எனதாக இருக்கும். கனவுகளை நிறைவேற்ற வலிமையை தாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.