செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  கடல் அரிப்புக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் 300 கோடி ரூபாய் செலவு செய்தோம்… அந்த அளவிற்கு பணத்தை பார்க்காமல்…. நிதியை பார்க்காமல்…. நிதிச் சுமை இருந்தாலும் கூட,  மீனவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நாங்கள் செய்தோம். ஏனென்றால் மீனவர்கள் பொறுத்த வரையில் அந்நிய செலவானியை….  கிட்டத்தட்ட பல்லாயிர கோடி ரூபாய் நம்முடைய இந்திய திருநாட்டிற்கு….. நம்முடைய தமிழகத்திற்கு பெற்று தருகின்ற நிலையிலே…. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி என்பது என்பது எங்களுடைய ஆட்சி காலத்தில் நிறைய இருந்தது.

ஆனால்  இந்த ஆட்சி காலத்தில்…..  மீனவர்கள் கண்ணீர் சிந்துகின்ற ஒரு நிலைமைதான் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது….  எங்களுடைய ஆட்சி காலத்தில் தான் மீனவர்களுக்கு  சிறப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தினோம். ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.  இன்றைக்கு கூட இலங்கை சிறையிலே வாடுகிறார்கள்,  அவர்களுக்கு கடிதம் எழுதுகின்ற போக்குதான், ஒரு  பாதுகாப்பு இல்லை…

அந்நிய நாட்டிலே ஒரு மீனவர் கடத்தப்படுகிறார்கள். அந்த மீனவரை  விடுவிப்பதற்கு வெறும் கடிதம் தான் எழுதி இருக்கிறார்கள்.  இப்படி மீனவர்கள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். மீனவர்கள் எல்லாம் இரட்டை இலைக்கு தான்  போடுவார்கள் என தலைவர் காலத்திலே எழுத்தபட்டது. அதனால் அவர்களுக்கு எதுக்கு செய்யணும் என்ற வகையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.