விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆன்லைன் மூலம் பணத்தை மோசடி செய்தவரிடம் இருந்து 23 லட்சத்து 83 ஆயிரத்து 58 ரூபாய் பணத்தை மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட பணம் இழந்தவர்களின் வங்கி கணக்கில் மீண்டும் எழுதப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற டெலிபோன் எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணம் மீட்கப்படும் என கூறியுள்ளார்.