தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாப்பாநாடு காவல் நிலையம் அருகே ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டி சென்றார். கடந்த 26-ஆம் தேதி வேதாரணியத்தில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியும், இருசக்கர வாகனமும் மோதி கொண்டதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் சந்தர் லாரியை பாப்பாநாடு காவல் நிலையம் முன்பு நிறுத்திவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். நேற்று காலை சங்கர் லாரியில் ஏறி பார்த்த போது இரும்பு ஜாக்கி, 4,500 பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா கட்சி ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் லாரியிலிருந்து ஜாக்கி மற்றும் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் யாரோ அந்த ஜாக்கியை மட்டும் திரும்ப லாரிக்குள் வைத்துள்ளனர். பணத்தை வைக்கவில்லை உடனே போலீசார் பொருள் தன கிடைத்துவிட்டதே என கூறி சங்கரை சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.