உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் புத்தேஸ்வர் மகாதேவ் கோவிலில் குரங்கு ஒன்று தினம் தோறும் கடவுளை வணங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், குரங்கு ஒன்று தினந்தோறும் கோவிலில் உள்ள சுவரின் மீது ஏறி, இறங்கி பிரதான சன்னிதிக்கு முன் சென்று சிவனை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறது. இந்த நிகழ்வு வழக்கமாக தினசரி நடைபெறுவதாக அங்குள்ள பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் குரங்கு எந்தவித அச்சமும் இன்றி, பக்தியுடன் இறைவனை வணங்குவது அங்குள்ள அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு குரங்கின் பக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பலரும் இதுபோன்ற சம்பவங்கள் புனித அனுபவங்களை இந்தியாவில் மட்டும் தான் நம்மால் காண முடியும்! என தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.