ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அரவிந்த்நகர் விமான நிலைய காவல் நிலைய எல்லையில் நடந்த சோகமிகுந்த விபத்து ஒரு குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சந்தைக்கு சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது 5 வயது மகள் ஜெயஸ்ரீ நவியின் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது.

அதன் பின் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்றார். இதில் 5 வயது சிறுமி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இது சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அந்த சிறுமி எம்.டி.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ புதன்கிழமை காலை வைரலாகியது.

அதில், வேகமாக வந்த கார் திடீரென தாய், மகள் மீது மோதும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில், தாய் எவ்வளவு அதிர்ச்சியடைந்தார் என்றும், தொடர்ந்து தன்னையும் மகளையும் பாதுகாப்பதற்காக செய்த முயற்சி உணர்ச்சிபூர்வமாகக் காணப்படுகிறது. இந்த வீடியோ வெளியாகியதையடுத்து, போலீசார் சிசிடிவி மூலம் காரை அடையாளம் கண்டுபிடித்து இரவில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 

கார் ஓட்டுநர் தற்போது தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாயும் ,மகளும் சந்தைக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சிறுமியின் தந்தை ஹிமான்ஷு குர்ஜார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓட்டுநரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.