சமூக வலைதளத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவில் ஒரு ஆண் ஒரு பெண்ணை கடுமையாக தாக்குகிறார். 18 வினாடிகள் ஓடுகின்ற இந்த வீடியோ பதிவு முதலில் ஏதோ ஒரு காதலருக்கு இடையேயான வன்முறை என்று கருதப்பட்ட நிலையில்; இது ஒரு குடும்பப் பிரச்சினை காரணமாக சகோதரன் தனது சகோதரியை தாக்கும் சம்பவம்  வைரலாகி வருகிறது.

இதில் சகோதரனிடம் பொய் கூறிவிட்டு சகோதரி காதலனுடன் சென்றுள்ள நிலையில் தனது தாய் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது தாயை பார்ப்பதற்காக வருகிறார் இந்நிலையில் ஆத்திரம் கொண்ட அந்தப் பெண்ணின் சகோதரர் சகோதரி மீது கொண்ட ஆத்திரத்தில் தாக்குகிறார். இந்த வீடியோ பதிவு 2022 இல் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டது.

தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது. இந்நிலையை சகோதரன் தனது சகோதரியை கடுமையாக தாக்கும் நிகழ்விற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இருப்பினும் அந்தப் பெண் அவ்வாறு செய்திருக்கக் கூடாது தாயை கவனிக்க வேண்டிய பொறுப்பை புறம்தள்ளிவிட்டு சென்றது தவறு என்று பலரும் தங்களது எதிர்வினையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

“>