
அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், குலத்தொழிலை நாங்கள் எதிர்ப்போம் என திமுகவினர் சொல்கிறார்கள். யாருடா ஆடு மேய்க்கிறவன் பையன் டாக்டர் ஆகுறான். கூலி வேலை செய்றவன் பையன் ஐஏஎஸ் ஆகிறான். இன்னைக்கு எங்கடா இருக்கு குலத்தொழில் இருக்கு. இந்தியாவிலே ஒரே குடும்பத்தில் தான் குலத்தொழில் இருக்கின்றது. கோபாலபுரம் குடும்பத்துல திமுக அடிமைகள்… ஒரே குலத்தொழில் தாத்தா கருணாநிதி முதலமைச்சர், திமுக தலைவர்.
தாத்தாவிற்கு பிறகு மு.க ஸ்டாலின் முதலமைச்சர், திமுக உடைய தலைவர். இளைஞர் அணி செயலாளர் பதவியை கூட விட்டு கொடுக்க மாட்டாங்க. அதிலும் 65 வயது வரை மு.க ஸ்டாலினை தான் வைத்திருந்தார்கள். உலகத்திலே 65 வயசு வரை இளைஞராக இருந்த ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் தான். இப்ப யாருக்கு கொடுத்திருக்கானா….. அவர் பிள்ளை. கருணாநிதி பேரேன். மு.க ஸ்டாலின் புள்ள. ஆகவே இன்னைக்கு குலத்தொழிலை கடைபிடிக்கின்ற ஒரே கட்சி திமுக மட்டும் தான். அதனால உனக்கு இதெல்லாம் பேசுறதுக்கு அருகதையே கிடையாது.
திமுகவில் யாருக்கும் தகுதி கிடையாது. அருகதை கிடையாது. சனாதனம் என பேசும் உதயநிதி முதலில் உங்க அம்மாவை திருத்த வேண்டும். ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்னாடி, மிஸ்டர் உதயநிதி…. மிஸ்டர் உதயநிதி…. காது கேக்குதா ? இன்னும் சினிமா நியாபகத்திலே இருக்காத… சினிமா வசனம் பேசிட்டு இருக்குறதா நினைக்காத… இங்க யாரும் உன்ன ஷூட்டிங் எடுக்கல. நீ மாநிலத்துடைய அமைச்சர். அந்த பொறுப்பை உணர்ந்து பேசு. தராதரமற்ற முறையில்…. மூன்றாம்தர முறையில்… ரவுடி மாதிரி பேசிட்டு இருக்காத… அனைத்து மதம் சமம் என பேசினார்.