
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு தமன் இசை அமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இத்திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 210 கோடிகள் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில் படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கின்றது. இதனால் விஜய் ரசிகாஸ் ட்விட்டரில் #MrNumberOneVIJAY என்ற ஹேஷ்டாக்குடன் ட்ரெண்டாக்கி வருகின்றார்கள்.
Podra bgm ah 🔥#MegaBlockbusterVarisu collects 250Crs+ worldwide in 11 days nanba 🤩#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @TSeries #Varisu #VarisuPongal#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ
— Sri Venkateswara Creations (@SVC_official) January 23, 2023