திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக உலாவிய சர்ச்சையை எதிர்த்து, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். கோவிலின் புனித தன்மையை காக்கும் நோக்கில் அவர் இந்த விரதத்தை மேற்கொண்டார். விரதத்தின் போது பவன் கல்யாண் கோவிலின் படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நேற்று விரதத்தை நிறைவு செய்த பவன் கல்யாண், அலிப்பிரி மலைப்பாதை வழியாக திருப்பதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டார். ஆனால், மலைப் படிகளை ஏறுவதில் சிரமப்பட்டு, இடையில் அமர்ந்து தண்ணீர் குடித்து இளைப்பாறினார் . மூச்சுத்திணறல் மற்றும் முதுகுவலியால் பாதிக்கப்பட்ட அவர், பெரும் முயற்சியுடன் தனது பயணத்தை தொடர்ந்தார்.

 

 

பவன் கல்யாணின் இந்த பாதயாத்திரை மற்றும் அவரது கடினமான பிரயாணம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. அவரது தியாக உணர்வு மற்றும் போராட்டம் ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.