
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி கழிவுநீர் கால்வாய்களை 10 லட்ச ரூபாய் செலவில் முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனால் அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் தடை இன்றி செல்லும் வழியில் ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. மேலும் பணியாளர்கள் கொசுப்புகை மருந்து அளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம், நகர செயலாளர் பொன்னுசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.