கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் டாட்டா பவர் நிறுவன மும்பை விற்பனை தலைவர் வீரேந்திர கோயல், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பெருகி வரும் மின்சார வாகனங்களால், பொதுமக்களுக்கும் சுற்று சூழலுக்கும் பல நன்மைகள் ஏற்படுகிறது. எனவே கோவை மாநகரில் 20 இடங்களில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் டாட்டா பவர் ஏஸ் சார்ஜ் அப்ளிகேஷன் வழியாக சார்ஜிங் நிலையங்களை கண்டறிதல், கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்.

ஒரு வாகனத்திற்கு 60 நிமிடத்திற்குள் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இந்நிலையில் வ.உ.சி பூங்கா பகுதியிலிருந்து 2 இடங்கள், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 4 இடங்கள், வாலாங்குளம் பகுதியில் 2 இடங்கள், ஆர்.எஸ் புரம் பகுதியில் 3 இடங்கள், காளப்பட்டி சாலையில் 2 இடங்கள், பெரியகுளம், சரவணம்பட்டி, புரூக் பீல்டு, சிங்காநல்லூர், அவிநாசி சாலை டைடல் பார்க், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, துடியலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சார்ஜிங் நிலையம் என மொத்தம் 20 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட உள்ளது.