
சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீனா என்ற மகளும், சுகவானம் என்ற மகனும் இருந்துள்ளனர். நவீனா அந்த பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 13- ஆம் வகுப்பும், சுகவானம் 9- ஆம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அக்கா தம்பி இருவரும் வீட்டிற்கு முன்பு இருந்த அரளி பூவை பறித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் அக்கா தம்பி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ராஜா தனது பிள்ளைகளின் நிலையை கண்டு நிலைகுலைந்தார். அவரையும் தனசேகர் அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் அக்கா தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற ராஜாவை கேட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் குழந்தைகளின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தனசேகரின் அப்பாவும் ராஜாவின் அப்பாவும் அண்ணன் தம்பிகள் என்பது தெரியவந்தது. சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்ததால் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய தனசேகரனை போலீசார் தேடி வருகின்றனர்