கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி உத்தம பகுதியில் வசித்து வந்தவர் கார் ஓட்டுநர் மாதவராஜ். இவருடைய காரை கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரைக்கு செல்வதற்கு வாடகைக்கு பேசி மாதவராஜையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு சென்ற நபர்கள் ஓமலூர் பகுதியில் மாதவராஜ் கொலை செய்துவிட்டு காரை திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் பட்டறை சுரேஷ், விமல்ராஜ், இளங்கோவன், செல்லா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஜாமீனில் செல்லா என்பவர் வெளியே வந்துள்ளார். அதன் பின் 7 ஆண்டுகளாக செல்லா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி வாழ்ந்துள்ளார். இவரை தேடி வந்த காவல்துறையினர் 7 ஆண்டுகளுக்குப் பின் ஓமலூர் டிஎஸ்பி தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நேற்று இரவு செல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலையாளியை திறமையாக செயல்பட்டு கைது செய்த தனிப்படை காவல்துறையினரை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் பாராட்டியுள்ளார்.