இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இந்தியா சார்பில் முதன்முறையாக ஆஸ்கார் விருது பெற்ற பெருமையும் ஏ.ஆர் ரகுமானையே சாரும். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர் ரகுமான் புனேவில் இசை கான்செர்ட் ஒன்றினை நடத்தினார். அப்போது மேடையில் ஏ.ஆர் ரகுமான் பாடிக் கொண்டிருந்தபோது இரவு 10 மணி தாண்டி விட்டது. இதனால் அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென மேடையில் ஏறி பாடுவதை நிறுத்துமாறு கூறினார்.

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

அதாவது இரவு 10 மணி ஆகிவிட்டதால் இசை நிகழ்ச்சியை நிறுத்துமாறு போலீஸ்காரர் ஏ.ஆர் ரகுமானிடம் கூறியுள்ளார். அவர் கையை நீட்டி ஏ.ஆர் ரகுமானிடம் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 மணி தாண்டிவிட்டதால் நிகழ்ச்சியை நிறுத்துமாறு போலீஸ்காரர் கூறினாலும் ஒரு சர்வதேச இசை கலைஞரை இது மேடையில் அவமானப்படுத்துவது போன்ற செயல்தான் என ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் டுவிட்டரில் #DisrespectofARRakuman என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.

https://twitter.com/invinciblerakes/status/1653302094336757760?s=20