
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மரியாதைக்குரிய மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள்…. நாட்டினுடைய குடியரசு தலைவர் வேட்பாளராக நிக்கின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்….
இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா ஆதரித்து, அவர்களுக்கு அண்ணா திமுக சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து அவரை குடியரசு தலைவராகியது அண்ணா திமுக. ஒரு இஸ்லாமியர் குடியரசு தலைவர் பதவிக்கு வேட்பாளராக போட்டியிடுகின்ற பொழுது எதிர்த்து வாக்களித்தவர் இன்றைக்கு இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழக நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள்.
இவர்கள் இஸ்லாமியர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் ? என்பதை மட்டும் சிறுபான்மை மக்கள் உணர வேண்டும். இன்றைய தின முதலமைச்சர்க்கு இவ்வளவு கோவம் வருவதற்கு என்ன காரணம் ? இன்றைக்கு சிறுபான்மை மக்கள் எப்படி பாக்கிறார்கள்? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் கொடுக்க பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை அவர்களிடத்திலே இருக்கின்றது. இவ்வளவு கோவத்திற்கு காரணம் இதுதான் என்பதை ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கை வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.