கோவை வஉசி மைதானத்தில் திமுக சார்பாக முதல்வர் ஸ்டாலினின் 70 ஆண்டுகால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சியானது நேற்று தொடங்கி வருகிற 14-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இக்கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரையிலும் யாரும் காணாத பல்வேறு அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

அதோடு அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் போன்றவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்துகொள்ளும் விதமாக பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்து அங்குள்ள வருகைப் பதிவில் தன் கருத்தையும் பதிவுசெய்தார்.