
டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலவால் தன் தந்தையால் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக தற்போது கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி பண்டிகையின் போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது சில வாலிபர்கள் வர்ண பொடியை தூவியதோடு பாலியல் ரீதியாகவும் அந்த பெண்ணை துன்புறுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணையம் காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜப்பான் பெண் மீது சில வாலிபர்கள் வர்ண பொடியை தூவி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ வெளியான நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நான் 4-ம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தையுடன் வசித்த நிலையில் அவர் என்னை பாலியல் ரீதியாக மிகவும் துன்புறுத்தியுள்ளார். வீட்டுக்குள் நுழைந்த உடனே என்னை அடித்து துன்புறுத்துவார். எனக்கு ரத்தம் வந்தாலும் அவர் விட மாட்டார். மேலும் பெண்களுக்கு எதிராக கடந்த 6 வருடங்களில் ஒரு லட்சம் புகார்கள் வந்துள்ளது. மகளிர் குறைதீர்க்கும் சேவைக்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 அழைப்புகள் வருகிறது என்று கூறினார்.