
டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் சிஆர்பிஎப் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு அருகே நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தால் அருகில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன. அதோடு பள்ளியின் அருகில் நின்று கொண்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன.
இதன் காரணமாக பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.