வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவும், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.