தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மண்டோலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் சிறந்த உள்ளமும், என்றும் அழகே வடிவான ஜாக்குலினுக்கு எனது இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். நான் உன்னை இன்னும் அதிகமாகவே காதலிக்கிறேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சுகேஷ். சிறையில் உள்ள சுகேஷ் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது