இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது திரையில் தோன்றும்.

அதன்பின் நீங்கள் கியூ-ஆர் கோர்ட்டில் ஸ்கேன் செய்து (அ) ஏடிஎம் கார்டில் ஸ்வைப் செய்து கட்டணம் செலுத்திக்கொள்ளலாம். அதன்பின் 5 நிமிடத்தில் பிரியாணி பார்சல் வந்துவிடும். இதை பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதுடன் பிரியாணி நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர்.