தமிழகத்தில் போதை பொருட்கள் கிடைக்காததால் ஒருவர் கடைக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கடந்த 2ம் தேதி மாலை, 22 வயதான தீனதயாளன் என்ற இளைஞன், மளிகை கடைக்கு சென்று குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கேட்டுள்ளார். ஆனால், கடை உரிமையாளர் சீனிவாசன், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்று தெரிவித்ததால் தீனதயாளன் கோபமடைந்தார்.

தீனதயாளன் கடைக்கு வந்தபோது,  “கடையை தீ வைத்து எரித்து கொளுத்திவிடுவேன்” என மிரட்டியதாக கூறப்படுகிறது. கடை தீயேற்றி எரியும்போது,  தீயணைப்புத்துறை உடனே சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். அப்போது, கடையில் இருந்த 1.10 லட்சம் ரூபாய், ஜிராக்ஸ் இயந்திரம், பிரிண்டர், பிரிட்ஜ், டி.வி., இன்வெர்ட்டர், மற்றும் பல்வேறு மளிகை பொருட்கள் ஆகியவை தீயில் முற்றிலுமாக சேதமடைந்தன. இதற்கிடையில், சீனிவாசன் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகாரளித்த பிறகு, தீனதயாளனை கைது செய்ய வேண்டும் என பூவலம்பேடு கிராமவாசிகள் மத்தியில் போராட்டம் ஏற்பட்டது.

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீனதயாளனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.