
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், புரட்சி தலைவர் எப்படி வளர்த்தார். புரட்சி தலைவி அம்மா எப்படி வளர்த்தார் ? இன்றைக்கு அதற்கு சரியான நேரத்தில்…. சரியான முடிவுகளை எடுத்து… நமக்காக உழைக்கிற…. நமக்காக போராடுகிற….. ஒரு புரட்சி தொண்டனாக மக்கள் உங்களை பார்க்கிறார்கள்.
சரியான நேரத்தில்… சரியான முடிவை நீங்கள் எடுப்பீர்கள் என்று இந்த நாடு நம்புகிறது. தொண்டர்கள் நம்புகிறார்கள், நீங்கள் யாருக்கும் சளைத்தவர் அல்ல, நீங்கள் யாருக்கும் பயந்தவர்கள் அல்ல. உங்களுக்கு எல்லாமே தெரியும். எல்லாமே தெரிந்தும் கூட… அமைதிகாத்து உரிய நேரத்தில், உரிய முடிவு எடுப்பது மூலமாக இந்த தொண்டர்களை வாழ வைக்கிற மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் இறைவன் உங்களுக்கு அளித்திருக்கிறான்.
அதை நீங்கள் செய்து காட்டி இருக்கின்றீர்கள். கடந்த கால வரலாறு உங்களுக்கெல்லாம் தெரியும். தமிழ்நாட்டிலே ஒரு குடும்பத்தின் பிடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிக்கிவிடக்கூடாது என்று பொதுமக்கள் நினைத்தார்கள், தொண்டர்கள் நினைத்தார்கள். அதை ரொம்ப சாதுரியமாக… அமைதியாக நின்று, சாதித்து காட்டி குடும்பத்தின் பிடியிலே இருந்து இந்த கட்சியை மீட்ட பெருமை உங்களை தவிர, யாருக்கும் கிடையாது.
ஆனாலும் அந்தக் காலகட்டம் முடிந்த பிறகு சுழண்டு வருகின்ற இந்த அரசியல் வரலாற்றில், யார் யார் உழைத்திருந்தார். அது ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி, தனி மனிதராக இருந்தாலும் சரி, இயக்கமாக இருந்தாலும்… இந்த இயக்கத்தை நிலைப்படுத்துவதற்காக.. யார் உழைத்திருந்தாலும் எல்லோரும் அரவணைத்து சென்றால்தான் அண்ணா திமுக வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.