
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எப்பொழுது பார்த்தாலும் திரு.ஸ்டாலினும், அவருடைய மகன் திரு.உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வு, நீட் தேர்வு என்று எங்கே பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் அப்பாவும், மகனும் மாத்தி மாத்தி பேசினாங்க. தேர்தல் நேரத்திலும் வாக்குறுதி கொடுத்தாங்க. திமுக ஆட்சிக்கு வந்த உடனே முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும். எவ்வளவு நாள் ஆகிப்போச்சு, எத்தனை கோப்புல கையெழுத்து போட்டீங்க… இப்போ கேட்டா…
நாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம். ஆளுநர் கிட்ட அனுப்பிட்டோம் என சாக்கு போக்க சொல்லி, தட்டிக் கழிக்கிறார்கள்… ஆட்சியில் இருக்கிறபோது ஒரு பேச்சு… ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு. மக்களை ஏமாற்றி கவர்ச்சியாக பேசி ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்தை அவர்களால் நிறைவேற்ற முடியவில்ல. நாம் என்ன செய்தோமோ…. அண்ணா திமுக ஆட்சியில் என்ன செய்தோமோ, அதைத்தான் அவர்களும் செய்திருக்கிறார்கள் வேறு ஒன்றும் செய்யல…. மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் என விமர்சித்தார்.