தஞ்சாவூர் மாவட்டத்தில் 67 வயதான மலர்க்கொடி தனது வீட்டு அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்தபோது, மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதை பார்த்து மலர்கொடி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர் தப்பித்து சென்றார். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருட்டில் ஈடுபட்டது விஜயபாலன் என்பது தெரியவந்தது.

விஜயபாலன் (வயது 25) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். காதல் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் விஜயபாலன் ஆன்லைன் மூலமாக 6 இலட்சம் ரூபாய் கடன் வாங்கியிருப்பது, அதைத் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இந்த நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது.