
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 100ஆவது ராக்கெட் ஏவும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புவி நில வரைபடம் மற்றும் வானிலை நிகழ் நேரிட தரவுகளை பெறுவதற்காக NVS வகையான செயற்கைக்கோள்களை அனுப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் படி கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் NVS 1 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது NVS 2 விண்ணில் செலுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஜனவரி 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்த தயாராகி உள்ளது. இதற்கான கவுண்டவுன் ஜனவரி 28 இன்று அதிகாலை 5.23 மணிக்கு தொடங்குகிறது. இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டாவது ஏவுதளத்தில் புறப்பட தயாராகியுள்ளது. இந்த செயற்கைக்கோள் GSLV F5 ராக்கெட் உதவியுடன் விண்ணில் பாய உள்ளது.
NVS 2 செயற்கைக்கோள் சுமார் 2250 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 322 கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் புவியின் வடிவமைப்பு மற்றும் துல்லியமான விவசாயம், போக்குவரத்து மேலாண்மை போன்ற பல துறைகள் சார்ந்த சேவைகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.