தமிழகத்தில் 2.80 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்மார்ட் கார்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்ராபானி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் தற்போது 1.80 லட்சம் பேருக்கு கார்டுகள் தயாராக இருக்கிறதாம். அவர்களுக்கு புதிய கார்டுகளை விரைந்து கொடுக்க வேண்டும் எனவும் அதற்கான அறிவிப்பை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாதத்திற்குள் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.