
நீங்கள் ஆதார் கார்டை பெற்று 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தால் உடனே தங்கள் வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு இருக்கிறது. ஆகவே ஆதார் 10 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டு புதுப்பிக்கப்படாமல் இருப்பின், உங்களின் அடையாளச்சான்று மற்றும் முகவரிசான்று ஆவணங்களை பதிவேற்றம் செய்து அதை மீண்டும் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதற்கு ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு ரூ.25, ஆப்லைனில் பதிவேற்றம் செய்ய ரூ.50 கட்டணம் செலுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இனி பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழுடன் சேர்ந்து, ஆதார் கார்டும் வழங்கப்படவுள்ளது. அதோடு ஆதார் அப்டேட் செய்ய https://myaadhaar.uidai.gov.in/ இணையதளம் (அ) அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று தகவல்களை புதுப்பித்துக்கொள்ளலாம்.