உத்திர  பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி அந்த இளம் பெண் நிச்சயிக்கப்பட்ட நபருடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் ஒரு பகுதியில் உள்ள கால்வாயின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் தனியாக இருப்பதை கண்ட ஒரு ரவுடி கும்பல் அவர்களிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்களை வேறு பகுதிக்கு கடத்திச் சென்று, அந்த இளம் பெண்ணை வருங்கால கணவர் முன்பே ரவுடி கும்பலை சேர்ந்த வாலிபர்கள் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு அந்த நபரிடமிருந்த பணத்தையும் பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலியல் வன்கொடுமை செய்த 8 பேரையும் கைது செய்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.