
ஓபிஎஸ் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் வெல்லமண்டி நட்ராஜன் அவர்கள் பேசும் போது, நாங்கள் திருச்சியில் நடத்திய ஒரு மண்டல மாநாட்டில் 3 ½ லட்சம் பேர் கலந்து கொண்டாங்க. ஒரு மண்டல மாநாடுல இவ்வளவு பேரு. இப்படி 6 மண்டலம் மாநாடுன்னா… 6 x 3 =18… 21 லட்சம் பேர் களத்தில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு ஆற்றல் மிகுந்த ஒரு இயக்கமாக அருமை அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவருடைய தலைமையிலே வீர நடை போட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்.
இந்த இயக்கம் யாருக்காக ? அவர் அன்னைக்கே பேசினார்… மாவட்ட செயலாளர் கூட்டத்துல… நான் பொது செயலாளரா வரணும்னு இல்ல… ஒருங்கிணைப்பாளரா வரணும்ன்னு இல்ல… இங்க உக்காந்துட்டு இருக்குற சாதாரண தொண்டன, உட்காரவைச்சி அழகு பார்க்கணும். அதுக்காக தான் நான் தொடர்ந்து போராடிட்டு இருக்கேன். அதே மாதிரி எதிர்கால அமைய போகின்ற அம்மாவினுடைய அரசு. அந்த அரசினுடைய முதலமைச்சராக ஒரு சாதாரண தொண்டனதான் உட்காரவைச்சி பாக்கணும்னு நான் விரும்புகிறேன்.
அதனால அது வரைக்கும் கழகத்தை நடத்தக்கூடிய ஒரு ஆற்றல்… சக்தியை இறைவனிடம் நான் வேண்டிக் கொண்டு இருக்கின்றேன் என்று பல முறை அருமை அண்ணன் ஓபிஎஸ் சொன்னாங்க. எடப்பாடி பழனிச்சாமி கிட்ட கேக்குறேன். நீ எப்ப இருந்து இந்த கட்சியில இருக்க ? சொல்லு.. அத முதல்ல சொல்லு… எந்த ஆண்டு நீ உறுப்பினர் அட்டை வச்சிருக்க ? சொல்லு.. என்னிடம் ஒரு 8 உறுப்பினர் அட்டை இருக்கு என பேசினார்.