
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தஞ்சாவூர்காரனுக்கு தண்ணி வாங்கி கொடுங்க ? மணிப்பூருக்கு அவன் பாத்துக்குவான்.நீங்க ஒன்னும் கிழிக்க வேண்டாம். இப்ப போயிட்டாரு… இஸ்ரேலுக்கு போயிட்டாரு… இங்க இருக்கிற வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழிச்சவனை இதுவரைக்கும் பிடிக்க முடியல, வக்கில்ல, துப்பு இல்லை…
இந்த முதலமைச்சருக்கு…. இதுல இஸ்ரேல்ல இருக்கவங்கள போய் காப்பாற்ற போறாராம். உக்கிரேன்ல இருக்கின்றவனுங்களை காப்பாத்துறாராம்… உக்கிரேனுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா ? காப்பாத்த போறாராம்… இப்படி தமிழகத்தினுடைய உரிமையை விட்டுக் கொடுத்த அரசு. காவிரி பிரச்சனை மட்டுமல்ல, முல்லைப் பெரியாரிலும் தீர்ப்பை பெற்றுக் கொடுத்த அரசு அம்மாவின் உடைய அரசு.
அதை இன்றைக்கு நிறைவேற்றுவதற்கு திறமை இல்லாத ஒரு அரசு ஸ்டாலினுடைய அரசு. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்தது. அன்றைய முதலமைச்சர் உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். அன்றைக்கு இலங்கை ராணுவம் கொத்து குண்டுகளை போட்டு தமிழர்களை கொன்று குவித்தது. அதற்கு காரணம் அன்றைக்கு திமுக அரசு.
தினம்தோறும் இன்றைக்கு மீனவர்கள், விவசாயிகள் ,கொல்லப்படுகிறார்கள். அடிக்கப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த விஷயத்துல தமிழ்நாடு என்று வந்தாலே ? காங்கிரஸ் கட்சியிடம் காவிரி விஷயம் ஏன் கேட்க மாட்டேங்குற ? கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு. நீ யார் கூட கூட்டணி வச்சிருக்க…. காங்கிரஸ் கூட கூட்டணி வச்சிருக்கு. நாங்க கேட்டோம்.
பாரதிய ஜனதாவோட கூட்டணியில் இருந்த போதும் எங்களுடைய நாடாளுமன்ற 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்…. 1 நாள் இல்லை 2 நாள் இல்லை 22 நாள் நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிய அரசு , இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என கெத்தாக பேசினார்.